Poems


என் அனும்மாக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்........

12/08/2011

என்னவளே எனக்காவே
பிறந்தவளே - இன்றுவரை
எனக்காக வாழ்ந்து
கொண்டிருப்பவளே

எனக்காவே நீ பிறந்த தினம்
அல்லவா இன்று
விதியின் விளையாட்டு
இன்றைய நாளில் -கூட
உன்னருகில் இருந்து
அன்போடு உனை
வாழ்த்த நான் இல்லை

இருந்தாலும் ஒவ்வொரு
வருடமும் - உனை
முதல் ஆளாய் வாழ்த்திடுவேன்
அதில் கோடி இன்பம் எனக்கு
உனக்கு வரும்
துன்பங்கள் அனைத்தும் - எனை
வந்து அடைய இறைவனை
வேண்டுகிறேன்
ஏக்கத்தை விட்டு
சந்தோசமாய் நடைபோடு
உன் வழியில்
அடுத்த பிறந்த நாளில்
என்னருகில் இருப்பாய் - நீ

அன்புடன் வினோத்  (தவா)

*************************************************************

உன்னிடம் மட்டுமே..



உன்னிடம் மட்டுமே எப்போதும்
தோற்றுக்கொண்டு 
இருக்கவே விரும்புகிறேன்.

என்னை வெல்லும் பொழுதுகளில்
உன் கன்னக்குழி விழ நீ
சிரிக்கும் அந்த 
ஒற்றைச் சிரிப்புக்காக தானும்
உன்னிடத்தில்
தோற்றுக்கொண்டே இருக்க விரும்புகிறேன்.

புரியவில்லையடி இன்னும் எனக்கு!
போர் தொடங்கும் முன்பாகவே – நான்
எப்படி உன்னிடம் சரணாகதி
அடைந்து போகிறேன் என!
உன்னிடம் மட்டுமே
தோற்றுக்கொண்டு இருக்கவே
விரும்புகிறேன்!


***************************************************************************************

என் கடவுள் தந்த வரமே..!



செல்லம்மா!
உன் வருகை 
எந்தன் வாழ்வில் 
எத்தனை மாற்றங்களை 
நிகழ்த்தியிருக்கிறது 
பாலைவனமாய் இருந்த 
என் மனது
உன் சுவசத்தால்.... 
மலர்வனமாய் விரிந்தது.

உன் சிரிப்பு 
என் இதயகூட்டுக்குள்
ஓராயிரம் நட்சத்திரங்களை
ஊறச்செய்த்தது.

உன் குரல்
என் செவி வழி நுழைந்து
இற்றுப்போயிருந்த
என் இரத்த நளங்களில் 
பூப்பூக்க செய்த்தது.

நீ வந்த பிறகு
என் வாழ்க்கை 
வாசனை தைலம்
பூசிக்கொண்டது.

இந்த பிரபஞ்சத்தின் கிழ்
காதலென்னும் 
பல ஆயிரம்
சதுரமைல்களை
எனக்கென தந்த 
உன் கருணைக்கு
நான் செய்யபோவது யாது ? 
என்று அறியாமல்
விழி பிதுங்கி கிடக்கிறேனடி.

உன்னால் இன்று
நான் மலர்களின் பள்ளத்தாக்கில்
விழுந்து கிடக்கிறேனடி

சஹாராவாய் இருந்த என் 
இரவுகளில் இன்று
கமலமும், அல்லியும்
சந்திரனோடு காதல் சரசம் செய்கின்றன.

இத்தனை சுகமும்
நீ என்னைக்காதலிப்பதால்
கிடைத்த தேன் பொழுதுகள்.

என் கடவுள் தந்த வரமே!
உன்னோடு காலமெல்லாம்
சேர்ந்து இருப்பேன்.

உயிர் போனாலும்
உன் காலடியில் 
மலராக பூத்திருப்பேன்.

*******************************************************************
அணு மனசு தாங்காதே.....


நான்

நானாக இருக்க
முக்கியகாரணம்
நீதான்......


ஜீபூம்பா மாதிரி

நேரங்களும்

நொடிகளும்

நிமிடங்களும் செல்கின்றன...

உன்னோடு நான் பேசுகையில்....

எத்தனை தவறுகள் செய்தாலும்
உன்னிடம் மட்டும், நான்
உண்மையாகவே
இருக்கவிரும்புகின்றேன்.....

முடியாது என்று தெரிந்தும்
விடாமுயற்ச்சியுடன்
என்னையும் அழகு படுத்து
முயற்ச்சிப்பவள் நீதான்....

எதைகண்டு
மயங்கினாய் என்னிடம்?
லேசானநகைச்சுவையும்,
பளிர்சிரிப்பையும் தவிர,
என்னிடம் என்ன இருக்கின்றது???

சில நேரங்களில்
பயங்கர கோபம்வரும்
உன்மீது....

உன்னைஅழ வைக்க
எனது மனம் கணக்கு போடும்...

சாத்தியமில்லாத செயல், என்று
சிரிக்கின்றது...
எனது மனசாட்சி...

மாதத்தில் இரண்டு பீரை
ஒன்றாக குறைத்த சர்வாதிகாரி
நீதான்....

நீ
நானாக இருப்பதால்,
நான் நானாக இல்லை...

உன்னிடம் மட்டும்
முடியாது என்று தெரிந்தும்...
முடியும் என்று ,
பந்தயம் கட்டுகின்றது
என் இளகிய மனது...

...


இது கவிதை அல்ல என் உணர்வுகளின் வெளிப்பாடு...
படித்ததில் பிடித்தது.

தண்ணீர்!! தண்ணீர்!! தண்ணீர்!!



நீ அதிசயம் மட்டுமல்ல ...

நீ ஆச்சரியமான ஆசான் ....

உன் நேர்மையான பாதை வழி எங்கும் இன்பமே ....

உன் பாகுபாடில்லாத அணுகு முறையால்

நீ போகும், நிற்கும், நடக்கும், ஓடும் இடமெல்லாம் சுகமே ....



நீ பார்க்காத பள்ளம் எங்குமில்லை

அதனால் நீ தளர்வதுமில்லை

பள்ளத்தை நிறைத்து பொங்கி எழும்
உன் வேகம் உணர்த்தும் உத்வேகம், பாய்ச்சிடுமே புத்துணர்ச்சி ....

சுத்த தங்கமாக நீ வலம் வந்து
மற்றவர்களின் மாசுக்களை சுமந்து செல்லும்
நீ உண்மையில் ஒரு சீர்திருத்தவாதி .....
அழுத்தமாக நீ செய்யும் தியாகம் ....நன்மையின் உச்சம் ..

நீ பயணித்த பாதையில்தான்
உயிரினம் வாழுமிடம் அமைத்தது ...
உன் வருகையால் அடைந்த தைரியம் ... அளவிடற்கரியது ...

உன் சலசலப்பில் நாங்கள்
உன்னை பருகினோம்,
உன்னில் நீந்தினோம்,
உன்னில் பயணித்தோம்,
உன் வரவால் பயிரிட்டோம் ...
உன்னால் நாங்கள் அடையும் சுகம் ... விவரிக்கமுடியதது ...

உன் பருவ காலங்களில் நீ
வரும் வழியெல்லாம் உன்னுடன் நீ
அழைத்து வரும் துள்ளல் தரும் இதம் ...... எப்படி சொல்வேன்? ...

நீ பாய்ந்த பிரதேசங்களில் எல்லாம்
தரை நிலமாக இருந்த வற்றஎல்லாம்
பூஞ்சோலை யாய் மாறியது ....
உயிரினம் சுவாசிக்க .... புசிக்க .....
மட்டுமல்ல .... ரசிக்கவும்!!!!

ஆனால்..........?
நீ பயணித்த வழியில் வாழுமிடம்
அமைத்த உயிரினம் .....

உன் வழியை,
உன் பாதையை,
சில மாதங்கள் நீ தங்குமிடத்தை எல்லாவற்றையும்
உயிரினங்கள் அடைத்து கூடு கட்டிகொண்டன .....

உன் வரவை அவர்களே (உயிரினங்கள்) தடுத்து கொண்டார்கள் ..
இழப்பு .... யாருக்கு? ...
நீரின்றி அமையாது உலகம் .......

சிந்திப்போமா?..... நாளை விடியலுக்கு .....

(மின்னஞ்சல் செய்தி)